முஸ்லிம் மக்கள் பாரிய அளவில் UPFAவில் இணைந்த வண்ணமுள்ளனர் -கண்டிக் கூட்டத்தில் எஸ்.பீ.திஸாநாயக்க
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்த முஸ்லிம்கள் தற்போது பாரியளவில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன...
http://kandyskynews.blogspot.com/2015/07/upfa.html

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்த முஸ்லிம்கள் தற்போது பாரியளவில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து வருவதாகவும் இது வரவேற்கத்தக்க விடயமாகுமெனவும் கண்டி மாவட்ட வேட்பாளர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்தார். கண்டி மாவட்ட வேட்பாளர் ஏ.எம்.எம்.சிம்சானுக்கு ஆதரவு தெரிவித்து, அக்குறணை, அரபா வரவேற்பு மண்டபத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
‘கடந்த ஜனாதிபதித் தேர்தலின் 97சதவீதமான முஸ்லிம் மக்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே வாக்களித்தனர். ஆனால், அந்நிலை தற்போது மாறிவிட்டது.
முஸ்லிம் மக்கள் பாரிய அளவில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்த வண்ணமுள்ளனர்.
எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமோக வெற்றி ஈட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைவதற்கு முஸ்லிம்கள் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது’ என்றும் அவர் தெரிவித்தார்.


Sri Lanka Rupee Exchange Rate