“LTTE” வாகனங்களை காசாக்கிய முக்கிய ஆசாமிகள்….?
டக்கின் இறுதி யுத்தத்தின் பின் பல்வேறு இடங்களிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டு முல்லைத்தீவில் குவிக்கப்பட்டிருந்த பத்தாயிரம் வாகனங்கள் இரண்டு ...
http://kandyskynews.blogspot.com/2015/07/ltte.html

டக்கின் இறுதி யுத்தத்தின் பின் பல்வேறு இடங்களிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டு முல்லைத்தீவில் குவிக்கப்பட்டிருந்த பத்தாயிரம் வாகனங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு குழுவினரினால் பழைய இரும்புக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலிகளுக்கு சொந்தமாக இருந்த வாகனங்களைப் போன்று தீவிரவாதிகளால் தென் பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் மிகவும் குறைந்த விலையில் வாங்கிய பெருமளவிலான வாகனங்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் இராணுவத்தினரால் தேடி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வாகனங்களில் பெறுமதியான வாகனங்கள் புலிகளாலேயே அழிக்கப்பட்டிருந்ததோடு சில வாகனங்கள் பாதி எரிந்த நிலையில் இருந்தன.அவற்றில் இன்னும் சில வாகனங்கள் சிறந்த நிலையில் இருந்தன. இந்த அனைத்து வாகனங்களும் முல்லைத்தீவில் ஒரு இடத்தில் குவிக்கப்பட்டிருந்தன.
உரிமையாளர்களை தேடிக் கண்டுபிடித்து அவற்றை உரிமையாளர் களுக்கு வழங்க முதலில் தீர்மானிக்கப் பட்டிருந்தாலும் அந்த நடவடிக்கை உரிய முறையில் நடைபெற வில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த அனைத்து வாகனங்களும் இயந்திரங் களைக் கொண்டு நொறுக்கி இரும்புத் துண்டுகளாக்கி கண்டனர்கள் மூலம் தென்பகுதிக்கு கொண்டு வந்து பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு ள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate