“JVP” மீது மகிந்த கடுப்பில்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் குற்றச்சாட்டுக்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ சார்பில் பதில் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்...
http://kandyskynews.blogspot.com/2015/07/jvp_22.html

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் குற்றச்சாட்டுக்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ சார்பில் பதில் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவரது ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில்,
தேர்தல் கூட்டம் ஒன்றின் போது, “ஜனாதிபதி ஆணைக்குழு மூலம், மஹிந்த ராஜபக்ஷ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாக நிரூபிக்கப்பட்டால் அவரது குடியுரிமை பறிக்கப்படலாம் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மிடம் கூறியதாக”, அனுரகுமார குறிப்பிட்டிருந்தார்.
எனவே மஹிந்த ராஜபக்ஷவுக்கு குடியுரிமை பறிபோகும் வாய்ப்பு இருப்பதால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களித்து பயனில்லை என மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ம.வி.மு முயற்சிக்கின்றனர்.
மஹிந்த ராஜபக்ஷவே விடுதலைப் புலிகளை ஒழித்த முதல் தலைவர் என்பதோடு, புலிகளுக்கு ஆயுதம் மற்றும் நிதி வழங்கிய ஜனாதிபதி, ரணசிங்க பிரேமதாஸவே என முதலில் நினைவூட்டுகின்றோம்.
இரண்டாவதாக மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையை பறிக்க எந்தவொரு ஜனாதிபதி ஆணைக்குழுவும் சிபாரிசு செய்யவில்லை.
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் கோரிக்கை நிறைவேற்றப்படாது அவ்வாறு எந்தவொரு குடிமகனின் குடியுரிமையையும் பறிக்கும் உரிமை ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இல்லை.
இம்முறை தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கப் பெரின், அது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கே, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலைக் முன்னணியின் கூட்டணிக்கு அல்ல, எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சீ.எஸ்.என் தொலைக்காட்சி அரச ஒலிபரப்புக் கோபுரங்களைப் (transmission towers) பயன்படுத்தியதாக அனுரகுமார முன்வைத்த குற்றச்சாட்டுக்கும் அந்த அறிக்கையில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
சீ.எஸ்.என். தொலைக்காட்சிக்கு சொந்தமாக ஏழு ஒலிபரப்புக் கோபுரங்கள் உள்ளதாகவும் அதனால் ஏனைய அலைவரிசைகளின் கோபுரங்களைப் பயன்படுத்தத் தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது


Sri Lanka Rupee Exchange Rate