மஹிந்தவின் உயிருக்கு உத்தரவாம் இல்லை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஐக்கிய ...


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பு மார்கஸ் பெர்னாண்டோ வீதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு வழங்கப்பட்டிருந்த வைத்தியர் மற்றும் அம்பியூலன்ஸ் வண்டி வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பாதுகாப்பாற்ற நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரனின் மைத்துனரான எம்.கே. சிவாஜிலிங்கம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த போட்டியிடும் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் இறுதிக் கனவை நனவாக்கவே தாம் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளதாகவும், பிரபாகரனின் இறுதிக் கனவு என்ன என்பது மக்களுக்கு நினைவு இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏதேனும் ஓர் காரணத்தினால் மஹிந்தவிற்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பினையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.