தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 107 பேர் கைது
எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய சட்ட மீறல்கள் குறித்து 107 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து இதுவரை 85 ...
http://kandyskynews.blogspot.com/2015/07/107.html

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய சட்ட மீறல்கள் குறித்து 107 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து இதுவரை 85 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதுதவிர தேர்தல் விதிகளுக்கு புறம்பாக பயன்படுத்தப்பட்ட 33 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள அனைத்து முறைப்பாடுகள் குறித்தும் பொலிஸ் தேர்தல்கள் பிரிவின் கண்காணிப்பின் கீழ், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, போலியான இலக்கத் தகடுடன் தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஏற்றிச்சென்ற கெப் வாகனமொன்றை கெப்பித்திகொல்லாவ பகுதியில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் அனுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் பிரதியமைச்சர் வீரகுமார திசாநாயக்கவின் சுவரொட்டிகள் கெப் வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கெப் வாகனத்தில் பயணித்த இருவர் இதன்போது கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் வாகனமொன்றினால் அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே கெப் வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate