ஆப்கான்., தலிபானுடன் கைகோர்க்க வேண்டும், இந்தியாவை தடுக்கவேண்டும் – முஷாரப்-

ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட வேண்டும் என்று விரும்பினால், அரசு, தலிபான்களுடன் அதிகாரத்தை பகிர்ந்துக் கொள்ள வேண்டும், இந்தியாவின் ஆதிக்கத்த...


news_26-02-2015_26musaraf
ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட வேண்டும் என்று விரும்பினால், அரசு, தலிபான்களுடன் அதிகாரத்தை பகிர்ந்துக் கொள்ள வேண்டும், இந்தியாவின் ஆதிக்கத்திற்கு தடைசெய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஷ் முஷாரப் தெரிவித்துள்ளார்.
தேச துரோக குற்ற சாட்டில் கைதான பாகிஸ்தான் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஷ் முஷாரப் தற்போது ஜாமீனில் உள்ளார். தி வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிக்கையில் பர்வேஷ் முஷாரப்பின் பேட்டி வெளியிடப்பட்டுள்ளது. பர்வேஷ் முஷாரப், கடந்த செப்டம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, அரசு மற்றும் தலிபான் மற்றும் பிற குழுக்களுடன் சமரசம் செய்துக் கொள்ள ஒருவாய்ப்பை வழங்கினார். அஷ்ரப் கானி சமச்சீரான மனிதர், அவர் சிறப்பான நம்பிக்கை கொண்டிருப்பார் என்று நான் நம்புகிறேன். பாகிஸ்தான் மற்றும் இந்தியா முற்றிலும் விலகியிருக்க வேண்டும். மறைமுகப் போரை ஊக்குவிப்பதை தவிர்க்க வேண்டும்.
ஆப்கானிஸ்தானில் பலூச் பிரிவினைவாதிகளுக்கு இந்தியா ஆயுதம் மற்றும் பிற உபகரணங்களை வழங்குகிறது, பயிற்சி அளிக்கிறது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் பாகிஸ்தானின் கவலைகளை கவனத்தில் எடுத்துக் கொள்வதில் தோல்வி அடைந்துவிட்டன, இஸ்லாமாபாத் மற்ற போராளிக் குழுக்கள் தங்கியிருக்க கட்டாயப்படுத்தப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரிகள் உள்ளனர், அவர்கள் எதிர்கொள்ளப்பட வேண்டும், எனக்கு எதிரியென்றால் அவர்களை எதிர்க்கொள்ள நான் மற்றொருவரை பயன்படுத்த வேண்டும். என்று பேசியுள்ளார்.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் செயத் அக்பருதீன் தி வால் ஸ்ட்ரீட் ஜெர்னலில் கூறுகையில் , “நாங்கள் வனாந்தரத்தில் இருந்து வரும் பேச்சுக்கு பதிலளிக்க தேவையில்லை, இத்தகைய பேச்சுக்கள் செய்தி இடத்தை ஆக்கிரமிப்பதற்கான முயற்சியே.” என்று கூறியுள்ளார்.

Related

உலகம் 3429969481922732574

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item