பிலிப்பைன்ஸ் நாட்டில் அல் கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய அபு சயீப் தீவிரவாதிகள் ஐ.எஸ். தீவிரவாதிகள் போல தொடர்ந்து தாக்குதல் ந...
பிலிப்பைன்ஸ் நாட்டில் அல் கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய அபு சயீப் தீவிரவாதிகள் ஐ.எஸ். தீவிரவாதிகள் போல தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க ராணுவத்திடம் பயிற்சி பெற்ற பிலிப்பைன்ஸ் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் அபு சயீப் தீவிரவாதிகள் சமீபத்தில் மலேசியா, ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் உள்பட 3 பேரை பணயக்கைதிகளாக கடத்திச் சென்றனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.
இதனையடுத்து பிலிப்பைன்ஸ்சில் உள்ள படிகுல் காட்டுப்பகுதியில் பதுங்கி உள்ள தீவிரவாதிகளை நோக்கி நேற்று ராணுவத்தினர் பீரங்கி தாக்குதலும், வான் வழி தாக்குதலும் நடத்தினர். இந்த தாக்குதலில் 14 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர். சண்டையின்போது 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர்