சிறிலங்காவின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரபுக்களுக்காக பிரத்தியேக விபச்சார விடுதியொன்று இயங்கி வந்தமை தற்போது அம்பல...
சிறிலங்காவின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரபுக்களுக்காக பிரத்தியேக விபச்சார விடுதியொன்று இயங்கி வந்தமை தற்போது அம்பலமாகியுள்ளது.
அத்துருகிரிய பிரதேசத்தில் இந்த விபச்சார விடுதி இயங்கி வந்தததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெலே சுதா என்ற போதைப்பொருள் வர்த்தகர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த விபச்சார விடுதி பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விபச்சார விடுதி தொடர்பில் கம்பஹா மாவட்ட பிரதிநிதித்துவம் செய்த முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவரிடம் பொலிஸார் விசாரணை நடத்த உள்ளனர்.
குறித்த பிரதி அமைச்சரிடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்த விபச்சார விடுதிக்கு அடிக்கடி சென்ற முன்னாள் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன