மஹிந்தவின் இராணுவ சதி முயற்சி! முன்னதாக அறிந்து கொண்ட மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவ சூழ்ச்சித் திட்டம் குறித்து ஒரு வார காலத்திற்கு முன்னரே அறிந்து கொண்டதாக அமைச்சர் விஜயதாச ராஜ...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_799.html

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவ சூழ்ச்சித் திட்டம் குறித்து ஒரு வார காலத்திற்கு முன்னரே அறிந்து கொண்டதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற ஜனவரி மாதம் 8ம் திகதிக்கு முன்னரே இராணுவ சூழ்ச்சித்திட்டம் பற்றிய தகவல்கள் தமக்கு கிடைக்கப்பெற்றது.
இந்த விடயம் குறித்து தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையாளர் முப்படையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்டவர்களுக்கு இந்த சூழ்ச்சித்திட்டம் பற்றிய விபரம் தெரியும்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவியுடன் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த மஹிந்த அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தில் நீடித்திருக்க இராணுவ சூழ்ச்சித் திட்டமொன்றை மேற்கொண்டதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate