மஹிந்தவின் பலவீனத்தை பயன்படுத்தி பசில் மோசடி!
சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பலவீனத்தை பயன்படுத்தி பசில் ராஜபக்ஷ மோசடிகளில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெ...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_876.html

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பலவீனத்தை பயன்படுத்தி பசில் ராஜபக்ஷ மோசடிகளில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ஷவுடன் மஹிந்த பலவீனமாக இருந்தார் என மேர்வின் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மஹிசந்த ராஜபக்சவிற்கு நன்றாக கண் தெரியும். பசில் செய்த தவறுகளை அவர் நன்றாக கவனித்தார்.
பசில் செய்த தவறுகளை எங்களிடம் சுட்டிக்காட்டி மஹிந்த அறிவுரைகள் வழங்கினார். பசிலுக்கும் காதுகள் நன்றாக கேட்கும், எனினும் சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு மஹிந்தவினால் முடியவில்லை.
தம்பியிடம் அண்ணன் பலவீனமாக இருந்தார் என மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate