விமல் வீரவன்சவின் மனைவி பிணையில் விடுதலை
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டி...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_814.html

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.
15000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா ஐந்து லட்ச ரூபாவிலான இரண்டு சரீரப் பிணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
போலியான ஆவணங்களை தயாரித்து கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டதாக சசி வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சாட்சியாளர்கள் மீது அழுத்தங்களை செலுத்தாமல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனை அடிப்படையில் சசி வீரவன்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate