ஒபாமாவை கொலை செய்வோம் என்ற உறுதிமொழி, நியூயார்க்கில் 3 வெளிநாட்டவர்கள் கைது

அமெரிக்காவில் இருந்து ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைய முயற்சி செய்ய மூன்று வெளிநாட்டவர்களை அந்நாட்டு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்...


news_26-02-2015_89isi
அமெரிக்காவில் இருந்து ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைய முயற்சி செய்ய மூன்று வெளிநாட்டவர்களை அந்நாட்டு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
நியூயார்க் நகரின் புரூக்ளின் பகுதியில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைய சிரியா செல்ல இருந்த தகவல்கள் அனைத்தும் வெளியாகியுள்ளது. அவர்களில் இரண்டு பேர், எங்களை சிரியாவிற்கு பயணம் செய்ய அனுமதிக்கவில்லை என்றால்  கொலை செய்துவிடுவோம் என்று நியூயார்க் போலீசார் மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரியை மிரட்டியுள்ளனர். கடந்த சிலமாதங்களில் உஸ்பெக் மொழியில் வெளியாகிய இணையதளம் ஒன்றில் போஸ்ட் செய்யப்பட்டு இருந்த தகவலை பார்த்தபின்னர் அமெரிக்காவின் புலனாய்வு பிரிவினர் உஷார் ஆனார்கள். பின்னரே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உஸ்பெக் மொழியில் வெளியான இணையதளத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை கொலை செய்வோம் என்று உறுதிமொழி எடுத்தது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டு இருந்தது என்று புலனாய்வு பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அப்துராசுல் ஜுராபோவ் (வயது 24), அப்ரோர் ஹபிபோவ் (வயது 30), ஆகியோர் உஸ்பெகிஸ்தான் நகரை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. மற்றொருவர் அஹ்ரோர் சைதாக்மேதோவ் (வயது 19) கஜகஸ்தானை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ள தீவிரவாத இயக்கங்களுக்கு நிதிஉதவி வழங்குவதற்கும் அவர்கள் சதிதிட்டம் தீட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சைதாக்மேதோவ் துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகருக்கு விமானத்தில் செல்ல முயன்றபோது வியாழன் அன்று புலனாய்வு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஜுராபோவ் நியூயார்க்கில் இருந்து இஸ்தான்புல் நகருக்கு செல்ல அடுத்த மாதம் டிக்கெட் எடுத்திருந்தார் என்று தெரியவந்துள்ளது. ஹபிபோவ், சைதாக்மேதோவ் சிரியாவிற்கு சென்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைவதற்கு பணஉதவி செய்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிரியா, ஈராக் நாட்டில் பல்வேறு பகுதிகளை தங்கள் வசம் கொண்டுவந்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறியாட்டம் உலகையே அச்சுறுத்த செய்துள்ளது.
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துவிட்டு உயிருக்கு பயந்து ஜிகாதிகள் சொந்த நாட்டிற்கு ஓடும் நிலையில் உலக நாடுகளில் இருந்து ஜிகாதிகள் அங்கு செல்வது மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


Related

உலகம் 5947585863919326791

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item