பிக்குவைப் பிடித்தார் சங்கரி….
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் ஆனந்த சங்கரி நேற்று வியாழக்கிழமை (23) கண்டி மல்வத்தை பீடத்துக்கு விஜயம் செய்து மகாநாயக்கத் தேரர் ...

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் ஆனந்த சங்கரி நேற்று வியாழக்கிழமை (23) கண்டி மல்வத்தை பீடத்துக்கு விஜயம் செய்து மகாநாயக்கத் தேரர் வண.திப்பட்டுவாவே சித்தார்த்த ஸ்ரீசுமங்கள தேரரையும் அஸ்கிரிய பீடத்துக்கு சென்று வண. கலகம அத்ததஸ்ஸீ தேரரையும் சந்தித்து நல்லாசி பெற்றுக்கொண்டார்.
நாம் சிறு பிள்ளையாக இருந்தபோது, எப்படியான ஒரு ஐக்கிய இலங்கையைக் கண்டோமோ அது போன்ற ஒரு இலங்கையை உருவாக்க சகல தரப்பினரும் முன்வர வேண்டும் என்று இதன் போது கூறினார்.
மஹிந்த சிந்தனை என்று திரும்பத் திரும்பிக் கூறிக் கொண்டே போய், அது தற்போது மக்களால் வழக்கொழிந்து விட்டது. இனி அது எடுபடவாய்ப்பில்லை என்றும் கூறினார். ஆனந்த சங்கரிக்கு நல்வாழ்த்துக்கள் கூறி வண. தேரர் நல்லாசி வழங்கினார்.