தம்புள்ள விவகாரத்தில் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த ஜனக பண்டார தென்னக்கோன் ஐ.தே.க வில்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் தம்புள்ள விவகாரத்தில் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தவருமான ஜனக பண்டார தென்னக்கோன் அக்கட்ச...

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் தம்புள்ள விவகாரத்தில் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தவருமான ஜனக பண்டார தென்னக்கோன் அக்கட்சியில் இருந்து இராஜினாமா செய்துக்கொண்டுள்ளார்.
அவர் இன்று அல்லது நாளைய தினம் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துக்கொள்வதற்காக இவ்வாறு இராஜினாமா செய்துள்ளதாக தெரியவருகிறது.
அதற்கமைய அவர் ஐக்கிய தேசிய கட்சியில் கீழ் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
புதிய ஜக்கிய தேசிய முன்னணி சம்பந்தமான நிகழ்வு நாளை காலை ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலறி மாளிகையில் நடைபெறவுள்ளது.
இதில் 15 மேற்பட்ட ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து பிரிந்து ஜ.தே.கட்சி இணையும் உறுப்பிணா்கள் ஒப்பந்தமென்றும் கைச்சாத்திடப்பட உள்ளதாக ராஜித்த தெரிவித்தாா்.