பதுளையில் சற்று முன்னர் முஸ்லிம் நபர் ஒருவர் கழுத்துவெட்டி படுகொலை..!
சற்று முன்னர் பதுளை நகரில் வீதியோர வியாபாரி ஒருவர் பட்டப்பகலில் நட்ட நடு வீதியில் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து ...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_865.html

சற்று முன்னர் பதுளை நகரில் வீதியோர வியாபாரி ஒருவர் பட்டப்பகலில் நட்ட நடு வீதியில் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முகமட் ரொசான் எனப்படும் வடை வியாபாரி ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகிறது.
23.07.2015 இன்று மாலை 4 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் இவர் கத்தி குத்துக்கு இழக்காகி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
பதுளை நகரத்தில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையிலிலேய இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பதுளை ரொக்கீல் பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கதக்க நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பதுளை பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





Sri Lanka Rupee Exchange Rate