மஹிந்தவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்: இராதகிருஷ்ணன்
தற்போது நடைபெறும் நல்லாட்சி தொடர முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதகிருஷ்ணன் தெரிவித்...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_815.html

தற்போது நடைபெறும் நல்லாட்சி தொடர முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதகிருஷ்ணன் தெரிவித்தார்.
அத்துடன் மஹிந்த யுகம் எமக்கு இனி வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை பூண்டுலோயா பகுதியில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பி.திகாம்பரம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மவாட்ட வேட்பாளர் திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர்,
இன்று நாட்டில் நல்லாட்சி தொடர்கின்றது. மக்கள் சுதந்திரமாக வாழ முடியும். நீதிமன்றம், தேர்தல் ஆணையாளர்ää ஊடகத்துறை போன்றவையும் சுதந்திரமாகச் செயற்படுகின்றன. பொருட்களின் விலையும் குறைந்துள்ளது. இந்நிலையில் தோட்ட மக்கள் எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். நமக்கு இனி மஹிந்த யுகம் வேண்டாம். எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மலையகத்தில் இருக்கின்ற ஒரு சில அரசியல் வாதிகள் தங்களுக்கு மைத்திரிபால சிறிசேனவை யார் என்று தெரியாது எனவும் தங்களுக்கு தெரிந்த ஒரேயொரு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எனவும் கூறி அரசியல் செய்தவர்கள் இன்று மைத்ரிபால வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் ஏன் அவரை சந்திக்கின்றார்கள் என எனக்கு புரியவில்லை.
ஆனால் அவர்கள் அனைவரும் இந்த தேர்தலில் முன்னால் ஜனாதிபதியின் பட்டியலில் போட்டியிடுகின்றார்கள். அவர்கள் எந்த பக்கம் யாருடன் இருக்கின்றார்கள் என்பது புரியவில்லை. எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைச்சசர்களான திகாம்பரம், மனோ கணேசன் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தெளிவாக சிந்தித்து காலத்திற்கு ஏற்ற வகையில் மக்களின் நாடித் துடிப்பபை அறிந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டு அவரை ஆதரித்து அமோக வெற்றி பெறச் செய்தார்கள்.
அதன் பின்பு நல்லாட்சியில் பங்கு தாரர்களாக மாறி அமைச்சு பொறுப்பை ஏற்று 100 நாள் வேலை திட்டத்தில் என்றுமே செய்ய முடியாது என்று கூறிய பல வேலைத்திட்டங்களை செய்துள்ளோம். இந்த தேர்தலின் பின்பு அமைய போகும் அரசாங்கத்தில் நாங்கள் மீண்டும் எமது தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் அமைச்சு பொறுப்பை ஏற்று மலையகத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த எங்களை அர்ப்பணித்து செயற்பட உள்ளோம்.
இன்று மலையக மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டார்கள். அவர்கள் இந்த தேர்தலில் நிச்சயமாக சிந்தித்து வாக்களித்து அவர்களுக்கு தேவையான மக்கள் சேவகர்களை தேர்ந்தெடுக்க தயாராகி விட்டார்கள். குறிப்பாக இன்று மலையகத்தில் உள்ள இளைஞர் யுவதிகள் எமது தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார்கள். இது வரவேற்க கூடிய ஒரு விடயமாகும். மலையக இளைஞர் யுவதிகள் சரியாக சிந்தித்து செயல்பட்டால் நிச்சயமாக எமது மலையகத்தில் மாற்றம் வெகு தொலைவில் இல்லை” என்றார்.