சுதந்திரக் கட்சியை மஹிந்தவுக்கு வழங்கிவிட்டு மைத்திரி விலக தீர்மானம்?
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்பதவியில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை வேட...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_623.html

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்பதவியில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை வேட்புமனு பட்டியலை ஒப்படைத்ததை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் விசேட உரை ஆற்றவுள்ளார்.
இவ்வாறு தனது தலைவர் பதிவை இராஜினாமா செய்துகொண்டதனை தொடர்ந்து ஜனாதிபதி சுயாதீனமான நபராக செயற்படவுள்ளார் என தெரியவந்துள்ளது.
எப்படியிருப்பினும் ஜனாதிபதி தனது எதிர்கால செயற்பாட்டு தொடர்பில் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட குழுவினருக்கு வேட்பு மனு வழங்கியமை தொடர்பில் இதுவரையில் நியாயப்படுத்தக்கூடிய காரணம் ஒன்றை குறைந்த பட்சம் தனக்கு நெருங்கியவர்களுக்கு உட்பட குறிப்பிடவில்லை.
ஜனாதிபதியின் இவ்வாறான செயற்பாடு காரணமாக சர்வதேச நாடுகளுடன் இலங்கை மேற்கொண்ட இராஜ தந்திர தொடர்புகள் முறிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறான முறிவுவின் முடிவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை சந்திக்ககூடும் என சர்வதேச அரசியல் கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.