16 வயது சிறுமியை உயிருடன் எரித்து கொன்ற கொடூரம்: கை தட்டி வேடிக்கை பார்த்த பொதுமக்கள்
மெக்சிகோ நாட்டில் 16 வயதான சிறுமி ஒருவரை பொது மக்கள் அடித்து துன்புறுத்தி உயிருடன் எரித்து கொன்ற கொடூர காட்சி இணையதளத்தில் வெளியாகி பெரும் ...
http://kandyskynews.blogspot.com/2015/05/16.html
மெக்சிகோ நாட்டில் 16 வயதான சிறுமி ஒருவரை பொது மக்கள் அடித்து துன்புறுத்தி உயிருடன் எரித்து கொன்ற கொடூர காட்சி இணையதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Guatemala நகரிலிருந்து 77 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள Rio Bravo என்ற கிராமத்தில் தான் இந்த கொடூர காட்சி அரங்கேறியுள்ளது.
அண்மையில் இணையத்தில் வெளியான இந்த வீடியோவில், 16 வயது நிரம்பிய சிறுமி ஒருவரை ஒரு கும்பல் சூழ்ந்து சரமாரியாக தாக்குகிறது.
சிறுமி கீழே விழுவதும், பின் கும்பலில் ஒருவர் அவருடைய முடியை பிடித்து தூக்கி நிறுத்தி பின்னர், மீண்டும் அந்த சிறுமியின் முகத்தை தாக்குவதும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
சிறுமியின் முகத்தில் ரத்தம் கொட்டும் வரை அந்த கும்பல் சுமார் 3 நிமிடங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். பின்னர், வலியை தாங்க முடியாத அந்த சிறுமி சாலையில் விழுந்து புரளுகிறார்.
அப்போது கூட்டத்திலிருந்து வந்த நபர் ஒருவர், அந்த சிறுமி மீது பெட்ரோலை ஊற்றி சட்டென பற்ற வைக்கிறான். உடல் முழுவதும் தீ பரவ அந்த சிறுமி கதறி துடிப்பதை அந்த கும்பல் கை தட்டி ஆரவாரம் செய்கிறது.
சில நொடிகள் கதறலுக்கு பின்னர், அந்த சிறுமியின் உடல் உயிரற்று அடங்குகிறது.
பொதுமக்களின் இக்கொடூர செயல் குறித்து செய்தி வெளியிட்ட அந்நாட்டு ஊடகங்கள், சிறிது நாட்களுக்கு முன்னர் அப்பகுதியில் Carlos Enrique González Noriega(68) என்ற நபர் டாக்ஸி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார்.
அப்போது, அந்த நபரிடம் கொள்ளையடிக்க வந்த இரண்டு நபர்களுடன் இந்த சிறுமியும் இருந்துள்ளார்.
டாக்ஸி ஓட்டுனரிடம் கொள்ளையடித்த அந்த இரண்டு நபர்கள், அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு அந்த இடத்தை விட்டு தப்ப முயற்சித்துள்ளனர்.
இதை சற்றும் எதிர்பாராத அந்த சிறுமியும் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடுகிறார். இரண்டு நபர்கள் தப்பி விட, இந்த சிறுமி அந்த பொது மக்களிடம் சிக்கி தற்போது கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.
யூடியூப்பில் அண்மையில் வெளியான இந்த வீடியோவை மில்லியன் கணக்கான மக்கள் பார்க்க இறுதியில், அந்த வீடியோவை யூடியூப் நீக்கிவிட்டது.
இணையத்தில் வெளியான இந்த வீடியோ குறித்து அந்நாட்டு பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.