”மாட்டு கறி சாப்பிடுபவர்கள் பாகிஸ்தானிற்கு ஓடுங்கள்”: அமைச்சரின் பேச்சால் வலுக்கும் சர்ச்சை
மாட்டு கறி சாப்பிட முடியாமல் போராடுபவர்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு ஓடுங்கள் என பாஜக அமைச்சர் கூறிய கருத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாஜ...
http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_589.html
மாட்டு கறி சாப்பிட முடியாமல் போராடுபவர்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு ஓடுங்கள் என பாஜக அமைச்சர் கூறிய கருத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பாஜக ஆட்சியின் நாடாளுமன்ற விவகார துறை அமைச்சரான முக்தர் அப்பாஸ் நக்வி, இன்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், மாட்டு கறிக்கு தடை செய்திருப்பது லாப நஷ்ட விவகாரம் அல்ல. இது இந்துக்களின் உணர்வுபூர்வமான நம்பிக்கை தொடர்பான விடயம்.
மாட்டு கறியை சாப்பிடாமல் போராடுபவர்கள் பாகிஸ்தான் மற்றும் அரேபிய நாடுகளுக்கு ஓடுங்கள். அங்கே தான் உங்களுக்கு மாட்டு கறி கிடைக்கும் என கூறியுள்ளார்.
தற்போது இஸ்லாமியர்களும் மாட்டு கறிக்கு எதிராக இருப்பதால், மாட்டு கறியை தடை செய்வது நியாயமானது என்றார்.
அமைச்சரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த AIMIM என்ற இஸ்லாமிய அமைப்பின் தலைவரான அசாதுதீன் ஓவைசி, மாட்டு கறிக்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் பாஜக அரசு, அதை நாடு முழுவதும் தடை செய்யுமா?
குறிப்பாக மாட்டு கறியை முக்கிய உணவாக கொண்டுள்ள கோவா, ஜம்மு&காஷ்மீர், கேரளா மாநிலங்களில் தடை விதிக்க பாஜக அரசால் முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மாட்டு கறி குறித்தான அமைச்சரின் கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது