இலங்கை சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கு சொந்­த­மான நாடு: சொல்கிறார் ஞானசாரர்

இலங்கையில் வாழும் தமிழ் முஸ்லிம்களை இலங்கையர்களாக ஏற்றுக் கொள்ள முடியாது என போதுபல சேனா பொதுக் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர் தெரிவித்து...

e1684-bbs1
இலங்கையில் வாழும் தமிழ் முஸ்லிம்களை இலங்கையர்களாக ஏற்றுக் கொள்ள முடியாது என போதுபல சேனா பொதுக் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கிருலப்பனையிலுள்ள பொதுபலசேனா அமைப்பின் அலுவலகத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே, ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு. இங்கு தமிழ், முஸ்லிம் என இனக் குழுக்கள் வாழ்கின்றனர். ஆனால் அவர்களை இலங்கையர்களாக ஏற்றுக் கொள்ள முடியாது என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்களவர்களுக்கு பிரச்சினை உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள ரணில், மஹிந்த, சந்திரிக்காவால் அறிந்து கொள்ள முடியாதுள்ளது என்றும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
1970களில் இருந்து இலங்கையின் தனித்துவம் தொடர்பாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இது நாட்டில் அமுலில் உள்ளதா? இல்லை.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கிரிக்கட் போட்டி நடக்கும்போது பாகிஸ்தானுக்காக இங்குள்ள முஸ்லிம் இளைஞர்கள் கரகோசம் செய்கின்றனர்.
அவர்களிடம் இலங்கையின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கொள்கை எங்கு போனது.
சிங்கள பௌத்தர்களை பாதுகாக்கவே நாம் செயற்படுகின்றோம்.

பாகிஸ்தான் கிரிக்கட் அணிக்கு கரகோஷம் செய்யும் இலங்கை முஸ்லிம் இளைஞர்களால் எமது தனித்துவத்தை இழந்துள்ளோம்.
இலங்கையிலுள்ள முஸ்லிம் அடிப்படை வாத அமைப்புக்கள் அனைத்தையும் தடை செய்ய வேண்டுமென பொதுபல சேனா அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் தலை தூக்கி வருவதாக நாம் மூன்று வருடங்களுக்கு முன்பிருந்தே கூறி வரு கின்றோம். நாம் இந்த ஆபத்து எச்சரிக்கை சமிக்ஞையை பலமுறை விடுத்தோம்.
இது முஸ்லிம் மக்களுக்கு எதிராக நாம் செய்த பிரசாரமல்ல. முஸ்லிம் அடிப்படைவாதிகள் தொடர்பாகவே எச்சரிக்கைகள் விடுத்தோம். ஆனால் அன்று எம்மை இனவாதிகள் என முத்திரை குத்தினார்கள்.
இன்று இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் உறுப்பினராக இருந்துள்ளதோடு சிரியாவில் நடத்தப்பட்ட விமானத்தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
அன்று நாம் சொன்னது இன்று உண்மையென்பது நிரூபணமாகியுள்ளது. எனவே அரசாங்கம் உடனடியாக இலங்கையில் இயங்கும் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்களை தடை செய்ய வேண்டும்.
பாதுகாப்பு தரப்பினரும் இவ்வாறான அமைப்புக்கள் தொடர்பாக விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related

தலைப்பு செய்தி 2071259315245896951

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item