மஹிந்த சுனாமி நிதியை துஸ்பிரயோகம் செய்தமைக்கு சாட்சியங்கள் உள்ளன: ரஞ்சன் ராமநாயக்க
தமக்கு எதிராக சட்டக் கடிதம் ஒன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அனுப்பியமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரி...


தமக்கு எதிராக சட்டக் கடிதம் ஒன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அனுப்பியமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச, தமது ஊழல்கள் தொடர்பில் பேசுவோரின் வாய்களை அடைப்பதற்காகவே இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாக ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச, எவ்வாறு சுனாமி நிவாரண நிதியை தமது சகோதரியின் கணக்குக்கு மாற்றி நிதி துஸ்பிரயோகம் மேற்கொண்டார் என்பதை தம்மால் சாட்சிகளுடன் நிரூபிக்க முடியும் என்றும் இது தொடர்பில் முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வாவின் குரல் பதிவு தம்மிடம் உள்ளதாகவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
தமது கட்சிக்காரருக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாக கூறி மஹிந்த ராஜபக்சவின் சட்டத்தரணி, அமைச்சர் மங்கள சமரவீர, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உட்பட்ட ஐவருக்கு சட்டக்கடிதம் அனுப்பவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் தாம் மஹிந்த ராஜபக்சவை நீதிமன்றத்தில் சந்திக்க எதிர்பார்ப்பதாக ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.