கலாமின் உடல் நாளை ராமேஸ்வரத்தில் நல்லடக்கம்

பள்ளிவாசல் மையவாடியிலா? பொது மையவாடியிலா என்பதில் தீர்மானமில்லை மறைந்த இந்­திய குடி­ய­ரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் நல்­ல­டக்கம் நாள...

பள்ளிவாசல் மையவாடியிலா? பொது மையவாடியிலா என்பதில் தீர்மானமில்லை

மறைந்த இந்­திய குடி­ய­ரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் நல்­ல­டக்கம் நாளை ராமேஸ்­வ­ரத்தில் இடம்­பெறும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அவ­ரது உடல் ராமேஸ்­வரம் பள்­ளி­வாசல் அடக்­கஸ்­தலம், ராமேஸ்­வரம் ஆபில் ஹாபில் தர்கா, பேருந்து நிலையம் அருகே உள்ள பொது மைய­வாடி ஆகி­ய­வற்றில் ஏதா­வ­தொன்றில் அடக்கம் செய்­யப்­படும் என அவ­ரது பேர­னான சேக் சலீம் ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்­துள்ளார்.



எனினும் இது­பற்றி இறுதித் தீர்­மானம் எட்­டப்­ப­ட­வில்லை என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இந்­திய குடி­ய­ரசின் முன்னாள் தலைவர் அவுல் பக்கீர் ஜைனு­லாப்தீன் அப்துல் கலாம் தனது 84 ஆவது வயதில் நேற்று முன்­தினம் இரவு மார­டைப்பால் உயி­ரி­ழந்தார்.

மேகா­லய தலை­நகர் ஷில்­லாங்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறு­வ­னத்தில் திங்கள் கிழமை மாலை நடை­பெற்ற நிகழ்ச்­சியில் கலாம் சிறப்பு விருந்­தி­ன­ராகப் பங்­கேற்றார்.

அங்கு திங்கள் மாலை 6.30 மணி அளவில் அவர் மாண­வர்கள் மத்­தியில் உரை­யாற்றிக் கொண்­டி­ருந்தார். அப்­போது திடீ­ரென மயங்கி விழுந்தார். உட­ன­டி­யாக அருகில் உள்ள பெதானி மருத்­து­வ­ம­னையில் அவர் அனு­ம­திக்­கப்­பட்டார்.

எனினும் அவர் ஏற்­கெ­னவே இறந்­து­விட்­ட­தாக டாக்­டர்கள் தெரி­வித்­தனர்.

இந்­நி­லையில், நேற்றுக் காலை சிறப்பு விமானம் மூலம் அசாம் தலை­நகர் குவா­ஹாட்­டியில் இருந்து டெல்லி கொண்டு செல்­லப்­பட்­டது.

மறைந்த குடி­ய­ரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் உடல் குவா­ஹாட்டி விமான நிலை­யத்தில் இருந்து டெல்லி பாலம் விமான நிலை­யத்­துக்கு கொண்டு வரப்­பட்­டது.

கலாம் உடலை, முப்­படை வீரர்­களும் பெற்றுக் கொண்­டனர். பின்னர் முப்­படைத் தள­ப­தி­களும் மரி­யாதை செலுத்­தினர். டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்­ரிவால், கலாம் உட­லுக்கு மரி­யாதை செலுத்­தினார். அவரைத் தொடர்ந்து அம்­மா­நில துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்க் கலாம் உட­லுக்கு மலர் வளையம் வைத்து இறுதி மரி­யாதை செலுத்­தினார். பிர­தமர் நரேந்­திர மோடி, கலாம் உட­லுக்கு மலர் வளையம் வைத்து மரி­யாதை செலுத்­தினார்.

அவரைத் தொடர்ந்து குடி­ய­ரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்­சாரி, குடி­ய­ரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகி­யோரும் மரி­யாதை செலுத்­தினர்.

கலாமின் உடல் டெல்லி பாலம் விமான நிலை­யத்­தி­லி­ருந்து இரா­ணுவ மரி­யா­தை­யுடன் ராஜாஜி மார்க் பகு­தியில் உள்ள அவ­ரது இல்­லத்­துக்கு கொண்டு வரப்­பட்­டது. அங்கு அவ­ரது உட­லுக்கு முன்னாள் பிர­தமர் மன்­மோகன் சிங், அவ­ரது மனைவி ஆகியோர் மரி­யாதை செலுத்­தினர். பல்­வேறு அர­சியல் கட்சித் தலை­வர்­களும் கலாம் உட­லுக்கு இறுதி மரி­யாதை செலுத்­தினர். கலாமின் உட­லுக்கு பொது­மக்கள் அஞ்­சலி செலுத்­தவும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

7 நாள் துக்கம்:
இதே­வேளை மத்­திய அரசு சார்பில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை 7 நாட்கள் துக்கம் அனு­ச­ரிக்­கப்­ப­டு­கி­றது.

இருப்­பினும் விடு­முறை ஏதும் இல்லை என அரசு அறி­வித்­துள்­ளது. 7 நாட்­களும் அரசு அலு­வ­ல­கங்­களில் தேசிய கொடி அரைக்­கம்­பத்தில் பறக்­க­வி­டப்­படும் என மத்­திய அரசு செய்திக் குறிப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஜூலை 30 இல் இறுதிச் சடங்கு:
நாளை வியா­ழக்­கி­ழமை ராமேஸ்­வ­ரத்தில் அவ­ரது இறு­திச்­ச­டங்கு நடை­பெறும் என மத்­திய உள்­துறை அமைச்­சகம் தெரி­வித்­துள்­ளது.

இறு­திச்­ச­டங்கு:
மறைந்த முன்னாள் குடி­ய­ரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் இன்று மதியம் 1 மணி­ய­ளவில் ராமேஸ்­வ­ரத்­திற்கு எடுத்துச் செல்­லப்­ப­ட­வுள்­ளது. பொது­மக்கள் அஞ்­ச­லிக்குப் பிறகு வியா­ழக்­கி­ழமை இறுதிச் சடங்­குகள் நடை­பெ­று­கி­றது.

அப்துல் கலாமின் உடலை அவ­ரது சொந்த ஊரான ராமேஸ்­வரம் கொண்டு வர வேண்டும் என்ற உற­வி­னர்­களின் கோரிக்கை ஏற்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வாறு கொண்டு வந்தால் எந்த இடத்தில் பொது­மக்­களின் அஞ்­ச­லிக்கு வைப்­பது, எவ்­வி­டத்தில் அடக்கம் செய்­வது என்­பது குறித்து ஆலோ­சனை நடத்­து­வ­தற்­காக மாவட்ட ஆட்­சியர் கே.நந்­த­குமார், மாவட்ட காவல் கண்­கா­ணிப்­பாளர் என்.எம்.மயில்­வா­கனன் ஆகியோர் நேற்று மதியம் ராமேஸ்­வரம் வந்­தனர்.

தாலுகா அலு­வ­ல­கத்தில் ஆலோ­சனை நடத்­திய அவர்கள் பின்னர், பள்­ளி­வாசல் தெருவில் உள்ள கலாமின் வீட்­டிற்கு வந்­தனர்.

அங்கு கலாமின் உற­வி­னர்­க­ளுடன் ஆலோ­சனை நடத்­திய அவர்கள், நாளையும் நாளை மறு­தி­னமும் நடை­பெறும் நிகழ்­வு­க­ளுக்­கான ஏற்­பா­டு­களைச் செய்­வ­தற்­காக அவ­ச­ர­மாக கிளம்­பினர்.

இது­பற்றி ஆட்­சி­ய­ரிடம் கேட்­ட­போது, "புதன்­கி­ழமை காலை 7 மணிக்கு அப்துல் கலாமின் உடல் டெல்­லியில் இருந்து ராமேஸ்­வரம் கொண்­டு­வ­ரப்­பட உள்­ளது. மதியம் 1 மணிக்கு உடல் வந்து சேரும் என்று எதிர்­பார்க்­கிறோம். அஞ்­சலி செலுத்­து­மிடம், அடக்­கஸ்­தலம் போன்­றவை இன்னும் முடிவு செய்­யப்­ப­ட­வில்லை" என்றார்.

அதைத் தொடர்ந்து பத்­தி­ரி­கை­யா­ளர்­களை சந்­தித்த கலாமின் பேரன் சேக் சலீம் கூறி­ய­போது, "அப்துல் கலாம் அவர்­களின் உடலை ராமேஸ்­வரம் கொண்டு வந்து, இறுதிச் சடங்­கு­களைச் செய்ய மத்­திய அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

மாநில அரசின் ஒத்­து­ழைப்­புடன் அதற்­கான ஏற்­பா­டு­களை மாவட்ட நிர்­வாகம் துரி­த­மாக செய்து வரு­கி­றது.

நாளை மதியம் 1 மணிக்கு அவ­ரது உடல் ராமேஸ்­வரம் வந்து சேரும்.

அதைத் தொடர்ந்து, பொது­மக்­களின் அஞ்­ச­லிக்­காக உடல் வைக்­கப்­படும். இரவு 7 அல்­லது 8 மணி வரை பொது­மக்கள் அஞ்­சலி செலுத்­து­வார்கள். அதைத் தொடர்ந்து மறுநாள் (வியாழன்) காலை 10.30 மணிக்கு நல்­ல­டக்கம் செய்­யப்­படும்" என்றார்.

பொது­மக்­களின் அஞ்­ச­லிக்கு உடல் வைக்­கப்­படும் இடம் மற்றும் அடக்­கஸ்­தலம் பற்றி இப்போது உறுதியாக சொல்லமுடியாது என்றும் கூறினார். ராமேஸ்வரத்தில் நெடுஞ்சாலையின் மீது அமைந்துள்ள பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்தான் உடல் வைக்கப்படும் என்று ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ராமேஸ்வரம் பள்ளிவாசல் அடக்கஸ்தலம், ராமேஸ்வரம் ஆபில் ஹாபில் தர்கா, பேருந்து நிலையம் அருகே உள்ள பொது மையவாடி ஆகியவற்றில் ஒன்று தேர்வு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related

தலைப்பு செய்தி 1706469226764946255

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item