மூன்றாவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றார் ஜெகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை செர்பியாவின் நோவாக் ஜெகோவிச் தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ...

மூன்றாவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றார் ஜெகோவிச்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை செர்பியாவின் நோவாக் ஜெகோவிச் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை 7-6(7-1),6-7(10-12),6-4,6-3 எனும் செட்கணக்கில் வென்றார்.

மிகவும் பரபரப்பு மிகுந்த இந்தப் போட்டி சிறிது நேரம் மழையின் காரணமாகத் தடைப்பட்டது.

நோவாக் ஜெகோவிச் மூன்றாவது முறையாக விம்பிள்டன் ஆடவர் பட்டத்தை வென்றுள்ளார். இதற்கு முன்னர் அவர் கடந்த 2011 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இப்பட்டத்தை வென்றிருந்தார்.

போட்டியின் முதல் இரண்டு செட்களும் மிகவும் விறுவிறுப்பாகச் சென்றன. முதல் செட்டை ஜெகோவிச் கைப்பற்றினாலும், இரண்டாவது செட்டில் பின்தங்கிய நிலையிலிருந்து மிகவும் அபாரமாக மீண்டுவந்த பெடரர் அதை 7-6 எனும் செட் கணக்கில் வென்றார். அதிலும் கடைசி செட்டை டை-பிரேக்கர் முறையில் 12-10 எனும் கணக்கில் வென்றார்.

ஆனாலும் அந்த உத்வேகத்தை அடுத்த இரண்டு செட்களில் அவரால் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.

இரண்டாவது செட்டை இழந்த நிலையில் அடுத்த இரண்டு செட்களையும் மிகவும் ஆளுமையுடன் ஆடி எளிதாக வென்றார் நொவெக் ஜெகோவிச்.

இந்த இறுதி ஆட்டத்தில் ரொஜர் பெடரர் வென்றிருந்தால், எட்டாவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றவர் எனும் பெருமையைப் பெற்றிருப்பார். ஆனால் அந்த வாய்ப்பை அவர் நழுவவிட்டார்.

Related

விளையாட்டு 8269003696957459578

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item