சீனாவில் 6.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம்
வடமேற்கு சீனாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் சின்ஷியாங் மாகாணத்தில் இ...
http://kandyskynews.blogspot.com/2015/07/64.html
வடமேற்கு சீனாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கம் சின்ஷியாங் மாகாணத்தில் இருந்து சுமார் 160 கி.மீ. தொலைவில் குமா கவுன்ட்டி அருகில் உள்ள ஹோடன் நகரில் ஏற்பட்டுள்ளது.
குமா கவுன்ட்டி பகுதியில் அதிக அளவு விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார். இந்த நிலநடுக்கம் சுமார் 10 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக விளங்கும் இந்தப்பகுதியில் இந்த வாரத்தில் ஏற்பட்ட 2 ஆவது நிலநடுக்கம் இதுவாகும். இந்த வருடத்தில் மட்டும் 8 முறை பூகம்பம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate