பிரித்தானிய மகாராணியை ஓரம் கட்ட பார்க்கிறாரா இளவரசி? சர்ச்சையில் சிக்கிய அரச குடும்பம்
பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத்தை தவிர்த்து விட்டு, அரச குடும்பத்தின் ஒட்டு மொத்த அதிகாரத்தையும் தனது சொந்த தாயாருக்கு இளவரசி கேட்...


பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத்தை தவிர்த்து விட்டு, அரச குடும்பத்தின் ஒட்டு மொத்த அதிகாரத்தையும் தனது சொந்த தாயாருக்கு இளவரசி கேட் மிடில்டன் வழங்கி வருவதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த Celeb Dirty Laundry என்ற இணையதள செய்தி நிறுவனம் ஒன்று அண்மையில் பரபரப்பான செய்தியை வெளியிட்டிருந்தது.
அதில், பிரித்தானிய அரச குடும்பத்தின் பராம்பரியமிக்க சம்பிரதாயங்களை மீறி இளவரசி கேட் மிடில்டன் செயல்பட்டு வருவதாக கூறியுள்ளது.
அதாவது, மகாராணியான இரண்டாம் எலிசபெத்தை ஓரங்கட்டும் வகையில், அரச அதிகாரங்களை தனது தாயாரான கரோல் மிடில்டன்னிற்கு வழங்கி வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு அந்த செய்தி நிறுவனம் சில உதாரணங்களையும் எடுத்துக்காட்டியுள்ளது.
கடந்த சில மாதங்களாக, அரச குடும்பத்தின் பக்கிங்கம் அரண்மனையை விட்டு வெளியேறி தனியாக வசித்து வருவதுடன், தனது பிள்ளைகளான ஜார்ஜையும், சார்லோட்டையும் தன்னுடைய தனிப்பட்ட கவனத்தில் கேட் மிடில்டன் வளர்த்து வருகிறார்.
ஆனால், அரசு குடும்பத்து வாரிசுகளை மகாராணி மற்றும் இளவரசரின் ஆலோசனை மற்றும் கவனிப்பில் தான் வளர்க்க வேண்டும் என்பது காலங்காலமாக பின்பற்றி வரும் சம்பிரதாயம் ஆகும்.
ஏனெனில், வாரிசுகள் தான் எதிர்காலத்தில் பிரித்தானிய ராஜ்ஜியத்தை ஆளப்போகிறார்கள் என்பதால், அவர்களுக்கு அரசு குடும்பத்தின் பாரம்பரியங்களை முறையாக கற்பித்து வளர்ப்பது அவசியம் ஆகும்.
ஆனால், அரசு குடும்பத்தில் தற்போது உள்ள சூழ்நிலையில், தாத்தாவான இளவரசர் சார்லஸை தனது பிள்ளைகளுடன் கேட் மிடில்டன் நெருங்க விடுவதில்லை என புகார்கள் எழுந்துள்ளது.
இதற்கு மாறாக, கேட் மிடில்டன்னின் தாயாரான கரோல் மிடில்டன் தான், பிள்ளைகளை வளர்த்து வருவது, அவர்களுக்கு என்ன தேவை, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது உள்பட அனைத்து அதிகாரங்களையும் செலுத்தி வருகிறார்.
இதனை கேட் மிடில்டனும் விரும்பி வரவேற்பதாகவே தெரிகிறது.
ஆனால், பேரன் மற்றும் பேத்தியை நெருங்க விடமால் கேட் மிடில்டனும் கரோல் மிடில்டனும் செயல்பட்டு வருவது, இளவரசர் சார்லசுக்கு பெரும் மன உலைச்சளை ஏற்படுத்தி உள்ளதாகவும், இதற்காக கரோல் மிடில்டன் சிறிதும் கவலை கொள்வதில்லை என அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
அதேபோல், அரசு குடும்பத்தினர் பின்பற்றி வரும் பாரம்பரியமிக்க சம்பிரதாயங்களை கூட கேட் மிடில்டன் பின் பற்றுவதில்லை என கூறப்படுகிறது.
அரசு குடும்பத்தின் இளவரசியான அவர், பொது இடங்களில் ஒரு நடுத்தர குடும்பத்து பெண் போல் நடந்துக்கொள்வது மகாராணியையும் இளவரசர் சார்லஸையும் எரிச்சல் அடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
உதாரணத்திற்கு, சில வாரங்களுக்கு முன்னர், பூங்கா ஒன்றில் தனது மகன் ஜார்ஜுடன் விளையாட சென்றிந்தபோது, மிக சாதாரண பெண்ணாக தன்னை காட்டி கொண்டுள்ளார் என்றும், ஜார்ஜ் மீது சில முறை அடக்குமுறைகளை பிரயோகித்தார் என்றும் தகவல்கள் வெளியானது.
இளவரசி சார்லோட் பிறந்ததற்கு பிறகு, அழகு நிலையம் ஒன்றிற்கு சென்ற கேட் மிடில்டன், அங்குள்ள ஊழியர்களுடன் மிக சாதாரணமாக நெருங்கி பழகினார் என்றும், அங்குள்ள சேவைகளை பெறுவதற்கு இளவரசி என்பதை மறந்து மிக சாதாரணமாக வேண்டுகோள்கள் விடுத்தார் என தகவல்கள் வெளியாகின.
விபத்தில் இறந்துபோன இளவரசி டயானா தன்னை ஒருபோதும் இளவரசியாக காட்டிக்கொள்ளாமல், மிகச்சாதாரணமாக பொது இடங்களில் வலம் வந்ததால் தான் இளவரசர் சார்லஸை விட்டு பிரியும் அளவிற்கு விவாகரத்து பெற நேரிட்டது.
அதேபோல், தற்போது இளவரசி கேட் மிடில்டன்னும் அரச சம்பிரதாயங்களை மீறி ஒரு இளவரசி போல் இல்லாமல் மிகச்சாதாரணமாக செயல்படுவதாக தொடர்ந்து எழுந்து வரும் புகார்களால் அரச குடும்பம் கவலையில் மூழ்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.