இலங்கை GSP+ வரிச் சலுகையை இழந்துள்ளதால் வருடத்திற்கு ஒரு பில்லியன் ரூபா நட்டம்
GSP+ வரிச் சலுகையை இழந்துள்ளதால் வருடத்திற்கு சுமார் ஒரு பில்லியன் ரூபா நட்டத்தை இலங்கை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரி...


இந்த சலுகையை மீண்டும் நாட்டிற்குப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா குறிப்பிடுகின்றார்.
இதன்பொருட்டு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் ஏற்கனவே சில, சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.
GSP+ வரிச் சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் சாதகமான சமிக்ஞையை காட்டியுள்ளதாக பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு முன்னர் GSP+ சலுகை மீண்டும் இலங்கைக்கு வழங்கப்படும் என வெளிவிவகார பிரதியமைச்சர் மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.