Buckingham அரண்மனையை விட்டு வெளியேறும் மகாராணி!

பிரித்தானிய மாகாராணி எலிசபெத் அவர்களின் பக்கிங்ஹாம் அரண்மனையில் பராமரிப்பு வேலைகள் நடைபெறவுள்ளன. சர்வதேச சுற்றுலாப்பயணிகள் பிரித்தானிய வரும்...


பிரித்தானிய மாகாராணி எலிசபெத் அவர்களின் பக்கிங்ஹாம் அரண்மனையில் பராமரிப்பு வேலைகள் நடைபெறவுள்ளன.

சர்வதேச சுற்றுலாப்பயணிகள் பிரித்தானிய வரும்போது பார்க்கவிரும்பும் முக்கிய சுற்றுலா ஈர்ப்பு மையமாக பக்கிங்ஹாம் அரண்மனை விளங்குகிறது.

இந்நிலையில், அங்கு 1952ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக மிகப்பெரிய பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

ஒட்டுமொத்த அரண்மனையிலுமே இந்த பராமரிப்புப்பணிகள் நடக்கவுள்ளன. அந்த பராமரிப்பு பணிகளை படிப்படியாக செய்வதா அல்லது ஒரேயடியாக செய்து முடிப்பதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த பராமரிப்புப்பணிகளை ஒரேயடியாக செய்து முடிக்க சம்பந்தப்பட்டவர்கள் முடிவெடுக்கும் பட்சத்தில், அந்த அரண்மனையிலிருந்து மாகாராணியும் அவரது குடும்ப உறுப்பினர்களும் வெளியேறவேண்டியிருக்கும் என்று கருதப்படுகிறது.

அப்படி மாகாராணியாரும் அவரது குடும்பமும் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெளியேறினால், பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து 25 மைல்தொலைவில் இருக்கும் விண்ட்சர் காஸ்ல் என்னும் மகாராணியின் இன்னொரு அரண்மனைக்கு அவரது குடும்பத்தவர் இடம்பெயரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related

உலகம் 122569715138645340

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item