சீனாவின் சிஞ்ஜியாங்கில் உய்குர் முஸ்லிம்களுக்கும் போலிசாருக்கும் இடையே மோதல்!:18 பேர் பலி
சீனாவின் சிஞ்ஜியாங் மாகாணத்தில் சிறுபான்மை பூர்விக உய்குர் முஸ்லிம்களுக்கும் போலிசாருக்கும் இடையே இவ்வாரம் மூண்ட மோதல்களில் 18 பேர் கொல்லப் ...
http://kandyskynews.blogspot.com/2015/06/18.html
சீனாவின் சிஞ்ஜியாங் மாகாணத்தில் சிறுபான்மை பூர்விக உய்குர் முஸ்லிம்களுக்கும் போலிசாருக்கும் இடையே இவ்வாரம் மூண்ட மோதல்களில் 18 பேர் கொல்லப் பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் மற்றும் போலிஸ் தரப்பால் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.
ஆனால் உய்குர் முஸ்லிம்கள் செறிந்து வாழும் கஷ்கர் நகரில் திங்கட்கிழமை கத்திகள் மற்றும் கைக்குண்டுகளுடன் போலிசாருடன் குறித்த சிறுபான்மை இன உய்குர் முஸ்லிம்கள் மோதலில் ஈடுபட்டதில் 28 பேர் கொல்லப் பட்டதாக வாஷிங்டனைத் தளமாகக் கொண்ட ரேடியோ ஃப்ரீ ஆசியா நியூஸ் சேர்விஸ் தெரிவித்திருந்ததாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் சீன செய்தி ஊடகங்களில் இந்த அசம்பாவிதம் குறித்த எந்த செய்தியும் வெளியாகவில்லை. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து இதுவரை வெளியான செய்திகளில் சோதனைச் சாவடியைத் தாண்டி தடையை மீறிச் செல்ல முயன்ற கார் ஒன்றைப் போலிசார் தடுத்து நிறுத்த முயன்ற போது இந்த மோதல்கள் ஆரம்பித்ததாகவும் தெரிவிக்கப் படுகின்றது. இதையடுத்து ஓர் போலிசாரின் காலை மிதித்துக் கொண்டு கார் பின்வாங்கியதாகவும் அக்காரைப் பின் தொடர்ந்த இரு ஆயுதம் தரிக்காத போலிசாரை உய்குர் பிரிவினை வாதிகள் கத்தியால் குத்திக் கொன்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து கத்திகளுடனும் சிறு கைக்குண்டுகளுடனும் பல உய்குர் பிரிவினை வாதிகள் ஒன்று கூடியதாகவும் பின்னர் அந்த இடத்தில் வந்து குவிந்த போலிசாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 15 உய்குர் போராளிகள் கொல்லப் பட்டதாகவும் குறித்த சம்பவம் விளக்கப் பட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate