ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்
கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பாரியளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் ஸ்த...


தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது.எனினும் இந்த ஆணைக்குழுவின் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணை நடாத்த தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தாமையே இதற்கான காரணமாகும்.
துணை பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் இந்த விசாரணைக் குழு நிறுவப்பட்டுள்ளது. பணிகளை முன்னெடுப்பதற்காக 9 பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த எண்ணிக்கை எந்த வகையிலும் போதுமானதல்ல என ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
பாரியளவிலான இலஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் இதுவரையில் 800 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விசாரணைகளை முன்னெடுப்பதற்கு மேலும் 14 பொலிஸ் உத்தியோகத்தர்களின் சேவை அவசியப்படுவதாக தெரிவித்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படாவிட்டால் விசாரணைகளை நடாத்துவதில் சிக்கல் நிலைமை உருவாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.