இலங்கையுடன் உறவை மேம்படுத்த பிரான்ஸ் ஆர்வமாக உள்ளது: தூதுவர்
இலங்கையுடன் இருதரப்பு உறவை மேம்படுத்திக்கொள்ள பிரான்ஸ் ஆவலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வர்த்தகம், முதலீடுகள், சுற்றுலா, ...


குறிப்பாக வர்த்தகம், முதலீடுகள், சுற்றுலா, மீன்பிடி, நீர்சுத்திகரிப்பு, சுற்றாடல், போதைவஸ்து தடுப்பு போன்ற விடயங்களில் இந்த ஆர்வம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரான்ஸின் தூதுவர் ஜீன் மாரின் சொச் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போது இதனை தெரிவித்துள்ளார்.
இதனொரு கட்டமாக பிரான்ஸின் ஆசியாவுக்கான தலைமையகம் இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பிரான்ஸ் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த வருடத்தில் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.