அரசியலில் இருந்து ஓய்வு பெற தயாரில்லை: மகிந்த
அரசியலில் ஈடுபட ஆரம்பித்த காலத்தில் இருந்து ஒருபோதும் தான் ஓய்வெடுத்ததில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தன்னை ஓ...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_965.html
தன்னை ஓய்வுபெற வைக்க பலர் முயற்சித்த போதிலும் தான் அதற்கு தயாரில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ஊவா பரணகம சுதர்ஷனாராம விகாரையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்தவர்கள், அந்த பதவியில் இருந்து விலகிய பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டனர்.
ஜே.ஆர். ஜெயவர்தன இதில் முக்கியமான அரசியல்வாதியாவார். ஒய்வு பெற்ற பின்னர் அவர் அரசாங்க விடயங்களிலேயோ அல்லது கட்சி விடங்களிலேயோ தலையிட்டதில்லை.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஓய்வுபெற்ற பின்னர் கடந்த 10 வருடங்களாக அரசியலில் ஈடுபடாது ஒதுங்கியிருந்தார். தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகராக இருந்து வருகிறார்.
இவ்வாறான சூழ்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நிலையில் செயற்பட்டு வருவதுடன் தனக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பிற கட்சிகளையும் பயன்படுத்தி பாரிய பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate