நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை -பெசில்
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ச எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். கட்சி ப...


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ச எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
கட்சி பிளவடைவதனை தடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இணைந்து மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் இரு தரப்பிலும் சில உறுப்பினர்களுக்கும் கட்சியில் வேட்புரிமை வழங்குவது குறித்து இரு தரப்பிலும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றது.
எப்படியிருப்பினும் சிக்கல் ஏற்படாத வகையில் அதற்கு தீர்வு காணமுடியும் என நான் நம்புகின்றேன்.
நான் இம் முறை பொது தேர்தலில் போட்டியிடவில்லை, தேசியப் பட்டியல் ஊடாகவும் வரப்போவதில்லை.
இதேவேளை விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவுக்கு கூட்டணியில் வேட்புரிமை வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.