வித்தியா கொலை வழக்கு விசாரணையில் திருப்பம்: பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மூவர் களத்தில்!

யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றில் தற்போது நடைபெற்றுவரும் வித்தியா கொலை வழக்கு விசாரணையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் மூவர் ஆஜரா...

யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றில் தற்போது நடைபெற்றுவரும் வித்தியா கொலை வழக்கு விசாரணையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் மூவர் ஆஜராகியுள்ளதாக தெரியவருகின்றது.


இவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக கொழும்பில் இருந்து வருகை தந்துள்ளதாகவும் இவர்கள் என்ன நோக்கத்திற்காக வருகை தந்துள்ளார்கள் என்பது பற்றிய விளக்கங்கள் நீதிமன்றில் தெளிவுபடுத்தப்படவில்லை.



இவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளின் சாதக பாதக நிலைமைகளை அவதானிப்பதற்காகவே வருகை தந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.



இதேநேரம் வித்தியா கொலை வழக்கில் அழையாமல் நுழைந்துள்ள இவ் மூன்று சட்டத்தரணிகள் குறித்து என்ன நோக்கத்திற்காக வருகை தந்துள்ளார்கள் என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இவர்கள் சந்தேக நபர்கள் சார்பாக ஆஜராகும் நோக்குடன் வருகை தந்துள்ளார்களா? அல்லது வித்தியா கொலை வழக்கை சட்டத்தரணி தவராசா அவர்களிடமிருந்து பரித்தெடுத்து வழக்கு விசாரணையை குழப்பும் நோக்குடன் வருகை தந்துள்ளார்களா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளதாக நீதிமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related

தலைப்பு செய்தி 6204081249873800756

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item