ரொஹிங்யா முஸ்லிம் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை!

மியன்மாரில் சிறுபான்மை சமூகமாக ரொஹிங்யா முஸ்லிம் எதிராக வன்முறைகள் பெரும் அவல நிலையாக மாறியுள்ளது. இந்நிலையில் ரொஹிங்யா முஸ்லிம் பெண்களை...

Image result for myanmar muslim girls
மியன்மாரில் சிறுபான்மை சமூகமாக ரொஹிங்யா முஸ்லிம் எதிராக வன்முறைகள் பெரும் அவல நிலையாக மாறியுள்ளது.

இந்நிலையில் ரொஹிங்யா முஸ்லிம் பெண்களை கடத்தல்காரர்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிறுபான்மை இனமான ரொஹிங்யா முஸ்லிம்கள் மீது, புத்த மதத்தினர் பல்வேறு கொடுமைகளை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு பயந்து ரொஹிங்யா முஸ்லிம்கள், மலேசியா இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு உயிர்பிழைக்க செல்கின்றனர்.

ஆதரவு கோரி செல்லும் இவர்கள் பயணிக்கும் வழியிலேயே, பசியாலும் பட்டியாலும் செத்துமடிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,

சமீபத்தில் மலேசிய எல்லைப்பகுதியில் 139 கல்லறை தளங்களும், 28 கடத்தல் முகாம்களும் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கல்லறை தளங்களில் 100-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இந்த எலும்புக்கூடுகள் கடத்தல்காரர்களால் கடத்தி வரப்பட்ட, ரொஹிங்யா முஸ்லிம் மக்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக மலேசிய உள்துறை மந்திரி அகமது ஷாகித் ஹமிதுவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் அடைக்கலம் தேடி வந்த ரொஹிங்யா முஸ்லிம் பெண்களை கடத்தல் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தாய்லாந்து நாட்டின் படாங் பேசர் பகுதியில் உள்ள கடத்தல் முகாமில் இருந்து தப்பித்த நூர் கைதா அப்துல் சுகுர் என்ற பெண்மணி, இது குறித்து மலேசிய செய்தி ஊடகமான பெர்னாமாவுக்கு அளித்துள்ள பேட்டியில், ஒவ்வொரு நாள் இரவிலும் எங்கள் இனத்தை சேர்ந்த 2 அல்லது 3 இளம்பெண்களை காட்டுக்குள் இழுத்துச்சென்று கடத்தல் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதனால் இரு பெண்கள் கர்ப்பமடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதே போன்ற பாலியல் பலாத்கார சம்பவங்கள் மலேசிய பகுதியிலும் நடைபெற்றதாக சுகுரின் கணவரான நூருல் அமின் நோபி ஹுசைனும் கூறியுள்ளார்.

Related

உலகம் 3239808280549694374

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item