புகைத்தலுக்கு அடிமையானவர்களை மீட்பதற்கான ஆலோசனை வழங்க விசேட தொலைபேசி இலக்கம்
புகைத்தலுக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள்வதற்கான ஆலோசனைகளை வழங்கும் விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய 1...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_770.html

புகைத்தலுக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள்வதற்கான ஆலோசனைகளை வழங்கும் விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய 1 9 4 8 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக அலோசனை சேவைகள் வழங்கப்படவுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானத்தை ஒழிப்பதற்கான தேசிய அதிகார சபையின் தலைவர் டொக்டர் பாலித்த அபேகோன் தெரிவித்தார்.
வார நாட்களில் அலுவலக நேரங்களில் இந்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எதிர்காலத்தில் இந்த தொலைபேசி சேவையை நீண்ட நேரம் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக டொக்டர் பாலித்த அபேகோன் குறிப்பிட்டார்.
பயிற்சி பெற்ற பொது சுகாதார பரிசோதகர்களின் ஊடாக இந்த ஆலோசனைகள் வழங்கப்படுவதாக புகையிலை மற்றும் மதுபானத்தை ஒழிப்பதற்கான தேசிய அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.


Sri Lanka Rupee Exchange Rate