யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற முத்தையா முரளிதரன்
சர்வதேச யோகா தினத்தையொட்டி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கொழும்பில் நேற்று நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். உலகம் முழ...


சர்வதேச யோகா தினத்தையொட்டி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கொழும்பில் நேற்று நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
உலகம் முழுவதும் நேற்று யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. பல ஆயிரம் மக்கள் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் நன்மைகளை பற்றி தெரிந்து கொண்டனர். கொழும்புவிலும் யோகா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதிகாலையிலே யோகா நிகழ்ச்சி நடைபெறும் காலே ஃபேஸ் கிரீன் பகுதிக்கு வந்த முன்னாள் இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் யோகாவில் பங்கேற்றார்.
தவிர, இதில் இலங்கை அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், ராணுவ அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.