மகிந்தவை ஜனாதிபதியாக்குமாறு மக்கள் கோருவதாக பொங்கமுவே நாலக தேரர் கூறுகிறார்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் என்று மக்கள் கோரவில்லை எனவும் அவரை நாட்டின் தலைவராக்க மக்கள் கோருவதாகவும் தேசப்பற்...


மக்கள் கோருவதாகவும் தேசப்பற்றுள்ள பிக்குகள் முன்னணியின் பொதுச் செயலளர் பொங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவை கைவிட்டுச் சென்ற அத்துரலியே ரத்ன தேரர் போன்ற பிக்குமார் பதவிகளை எதிர்பார்த்து மீண்டும் மகிந்த ராஜபக்சவிடம் நெருங்க முயற்சித்து வருவதாகவும் நாலக தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பிக்குமாரின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.