அமைச்சரவையில் சர்வாதிகார போக்குடன் சிலர் செயல்படுகின்றனர்

அமைச்சரவையில் சர்வாதிகார போக்கு தென்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்...

அமைச்சரவையில் சர்வாதிகார போக்கு தென்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களும் அமைச்சரவையின் சில உறுப்பினர்களும் கடும்போக்குடைய தன்மையில் செயற்பட்டு வருவதாவும் ஜனாதிபதி கனவிலிருப்பவர்களிடமிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சரவையின் ஒரு சில உறுப்பினர்கள் கடுமையான சர்வாதிகார போக்கில் செயற்பட்டு வருவதாகவும் சிறு கட்சிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 20ம் திருத்தச் சட்டம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் இந்த விடயத்தை எளிதாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Related

தலைப்பு செய்தி 5274296230383061422

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item