மைத்திரியை ஜனாதிபதியாக்கியது முட்டாள்தனம்
ஐக்கிய தேசியக் கட்சி கடந்த ஜனவரி 8 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட செய்து வெற்றி பெற செய்த...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_565.html

ஐக்கிய தேசியக் கட்சி கடந்த ஜனவரி 8 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட செய்து வெற்றி பெற செய்தமை முட்டாள்தனமான செயல் என்பது தற்போது உறுதியாகி வருவதாக ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற இளைஞர், யுவதிகளின் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தற்போது மீள முடியாத அளவுக்கு வீழ்ந்து போயுள்ளது. எனினும் ஜனாதிபதி அந்த முன்னணியை வெற்றியடைய செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு வகையில் சவாலை ஏற்படுத்துவதாகும். நமக்கு நாமே குழியை வெட்டிக்கொண்ட போன்ற செயலே நடக்கும்.
மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து போகும் கும்பலுக்கு மீண்டும் மக்கள் ஆணையை பெற முடியாது. அவர்களை ஒன்றிணைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்தால், அப்போதுதான் சிக்கல் தோன்றும்.
அவர்களை ஒன்றிணைக்கும் விடயத்தை காரணமாக கொண்டே ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைத்து வருகிறார். அதனை ஜனாதிபதி பகிரங்கமாக கூறியுள்ளதால், நாம் செய்த முட்டாள்தனம் உறுதியாகியுள்ளது என்றும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate