ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த மகிந்தவின் உறவினர்!– விசாரணைகளை நிறுத்துமாறு வேண்டுகோள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபச்சவின் குடும்ப உறவினர் ஒருவர் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து வேண்டுகோள் ஒன்றை விடுத்துள...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_538.html
தமக்கும், தமது குடும்பத்தினருக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் எதிராக நடத்தப்படும் சகல விசாரணைகளையும் நிறுத்தினால், எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதிக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என மகிந்த ராஜபக்ச தரப்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கோரிக்கையை நிராகரித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் எனக் கோரி மாத்தறையில் இன்று பொதுக் கூட்டம் நடைபெறும் நிலையில், ஜனாதிபதியிடம் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
எது எப்படியிருந்த போதிலும் மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக மாத்திரம் அல்ல அவருக்கு தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பை வழங்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது