ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த உலக முன்னாள் குத்துசண்டை சாம்பியன்
ஜேர்மனியை சேர்ந்த முன்னாள் கிக் பாக்ஸிங் சாம்பியன் ஒருவர் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜேர்மனியின் பாவரியா பகுதிய...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_483.html
ஜேர்மனியின் பாவரியா பகுதியை சேர்ந்தவர் வால்டெட் காஸி. முன்னாள் கிக் பாக்ஸிங் சாம்பியனான இவர் ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளதாகவும் தற்போது துருக்கி எல்லையில் உள்ள யூப்ரேடஸ் நதியின் அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னிடம் ஆயுதம் இருப்பதாகவும் கடவுளின் ஆசிர்வாதத்தால் இதுவரை தனது ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக காஸியின் முன்னாள் விளையாட்டு பயிற்சியாளர் கூறுகையில், காஸிக்கு இரண்டு வாழ்க்கை பக்கங்கள் இருந்தது.
நான் கிக் பாக்ஸர் காஸியை மட்டுமே பார்த்துள்ளேன். அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி எனக்கு தெரியாது.
எனினும் அவர் மதத்தை பற்றி இதுவரை தங்களிடம் விவாதித்தது இல்லை என்று கூறியுள்ளார்.
ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தாலும் காஸி சமூக வலைத்தளங்களை முன்பு போலவே சகஜமாக பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.