நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்படாது: அனைத்து இன மக்களும் இணைந்து செயற்படுவதே நல்லிணக்கமாகும்: ஜனாதிபதி
பயப்படாது பிரதியமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளுங்கள், உடனடியாக நாடாளுமன்றம் கலைக்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிதாக பதவிய...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_737.html
புதிதாக நியமிக்கப்பட்ட பிரதியமைச்சர்கள், நியமனங்களை பெறும் முன்னர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர். சுமார் ஒரு வார காலத்திற்கு தமக்கு அமைச்சு பதவிகள் அவசியமில்லை என அவர்கள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, பயப்படாமல் பதவிகளை ஏற்குமாறும் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் தன்னிடமே இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அனைத்து மாவட்டங்களுக்கும் அமைச்சர்களை நியமித்து கட்சியை கீழ் மட்டத்தில் இருந்து வலுப்படுத்திய பின்னரே நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்தப்படும்.
சில நேரம் வருட இறுதி வரை நாடாளுமன்றம் கலைக்கப்படாது எனவும் இதனால், அமைச்சு பதவிகளை பெற்று தமக்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பதிலால் திருப்தியடைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் ஜயசூரிய,திலங்க சுமதிபால உள்ளிட்ட 4 பேர் பிரதியமைச்சர் பதவிகளை பெற சம்மதித்துள்ளனர்.
மாத்தறை மாவட்டத்தில் மங்கள சமரவீர மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோரை பலவீனப்படுத்தும் நோக்கில் சனத் ஜயசூரியவும், விஜய தஹநாயக்கவும் பிரதியமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.