தற்போதைய ஆட்சியில் உள்ள சில கள்வர்களை வெளியில் அனுப்ப வேண்டும்: சரத் பொன்சேகா

தற்போதைய நல்லாட்சியிலும் கடந்த காலத்தில் இருந்த கள்வர்கள் போன்று சில கள்வர்கள் இருக்கின்றார்கள். அவர்களை வெளியில் அனுப்ப அனைவரும் ஒன்றிணைய ...


தற்போதைய நல்லாட்சியிலும் கடந்த காலத்தில் இருந்த கள்வர்கள் போன்று சில கள்வர்கள் இருக்கின்றார்கள். அவர்களை வெளியில் அனுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனநாயக கட்சியின் தலைவர், சரத் பொன்சேகா தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியை ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமோ அல்லது எங்களது கட்சியான ஜனநாயக கட்சி மாத்திரமோ கொண்டு வரவில்லை.
நல்லாட்சி மாற்றத்திற்கு நாட்டில் உள்ள அனைவரது பங்களிப்பும் உண்டு எனவும் குறிப்பிட்டார்.
ஜனநாய கட்சியின் கல்குடாத் தொகுதி கிளை ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்வு கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் ஆர்.எம்.புஹாரி தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை அல் – கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே இதனைத் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் இருந்த ஊழல் ஆட்சியை இல்லாமல் செய்து இந்த நாட்டில் நிலையான நல்லாட்சியைக் கொண்டுவர வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட நாட்டில் உள்ள அனைவரும் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாகவே நல்லாட்சி ஏற்பட்டது.
தற்போது ஆட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவருடைய கட்சிகளிலும் கள்வர்கள் உள்ளனர்.
கடந்த அரசாங்கத்தில் இருந்த கள்வர்களை இல்லாமல் செய்தது போல் எதிர்காலத்தில் தற்போதுள்ள சிலரையும் இல்லாமல் செய்து இன ஒற்றுமையுடனான ஆட்சி நிகழ்வதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

Related

தலைப்பு செய்தி 5598242202571038590

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item