இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டின் அழிவுக்கு காரணம் மகிந்த: அர்ஜூன ரணதுங்க
கிரிக்கெட் விளையாட்டின் அழிவுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொறுப்புக் கூறவேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அ...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_291.html
சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்று நாடு திரும்பும் விளையாட்டு வீரர்களை வரவேற்க கூட தற்போது எவரும் முன்வருதில்லை. இது விளையாட்டுத்துறையில் நாம் எதிர்நோக்கும் அனர்த்தமான நிலைமை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டு கடந்த காலத்தில் அரசியலமயமானது. விளையாட்டு வீரர்களின் அருகில் இருந்து புகைப்படங்களை எடுத்து அவற்றை கொண்டு தேர்தலில் வெற்றி பெறவே சில அரசியல்வாதிகள் முயற்சித்தனர்.
கடந்த காலத்தில் இது நடந்தது. நாட்டின் விளையாட்டு வீரர்களில் ஒரு சிலர் தமது நாட்டின் சர்வதேச போட்டிகளில் விளையாடாது. தனிப்பட்ட போட்டிகளில் விளையாட செல்ல முன்னாள் ஜனாதிபதியிடம் அனுமதிப்பெற்ற நாடு இது.
அந்த நாட்களே எனது வாழ்க்கையின் மிகவும் கவலைக்குரிய நாட்களாகும். அப்போது கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக நானே இருந்தேன் என்பது எனது கவலைக்கு காரணம்.
இதனை செய்ய வேண்டாம் என நான் கூறினேன். நாட்டின் போட்டிகளை நிறுத்தி விட்டு தனிப்பட்ட போட்டிகளில் கலந்து கொள்ள செல்ல அனுமதிக்க வழங்க வேண்டாம் என நான் கூறினேன்.
இவ்வாறு செய்ய வேண்டாம் என அன்றைய விளையாட்டுத்துறை அமைச்சரிடமும் முன்னாள் ஜனாதிபதியிடமும் கோரிக்கை விடுத்தேன். அதற்கு அவர்கள் செவிகொடுக்கவில்லை.
அன்றில் இருந்தே கிரிக்கெட் விளையாட்டின் அழிவு ஆரம்பித்தது என்று நான் எண்ணுகிறேன்.
கடந்த காலங்களில் நடந்தவற்றில் இருந்து பாடங்களை கற்று எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டியதே நாம் தற்போது செய்ய வேண்டியது எனவும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.