நல்லிணக்கத்தின் வலுவான அடித்தளத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – ஜனாதிபதி
நல்லிணக்கத்தின் வலுவான அடித்தளத்திற்கு அனைத்து இனங்களும் ஒன்றிணைந்து தொழிற்படுவது அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவி்த்துள்ளார்...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_492.html
நல்லிணக்கத்தின் வலுவான அடித்தளத்திற்கு அனைத்து இனங்களும் ஒன்றிணைந்து தொழிற்படுவது அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவி்த்துள்ளார்.
கொழும்பு 3 இல் அமைந்துள்ள புனித அந்தோனியார் மகளிர் வித்தியாலயத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
பாடசாலையின் 75 ஆவது ஆண்டின் நிறைவாக நிறுவப்பட்ட நினைவுச் சின்னத்தை ஜனாதிபதி திரை நீக்கம் செய்து வைத்தார்.
சமூகங்களிடையில் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்வதை, பிள்ளைகளிடையே அறிமுகப்படுத்துவதே நல்லிணக்கத்தின் ஆரம்ப கட்டமாகும் என இதன் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கத்தின் இந்த கட்டமைப்பை மதங்கள் மற்றும் இனங்களிடையே உருவாக்க வேண்டும் எனவும், மேலும் இந்த முறையில் சமூகங்களிடையே நல்லிணக்கத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.