இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர் தொழிலாளர்கள் காணப்படுகின்றனர் – நடாஷா பாலேந்திரன்
இலங்கையில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர் தொழிலாளர்கள் காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நடாஷா பாலே...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_275.html
தொழில் திணைக்களம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்துவதை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதுதவிர பாடசாலை செல்லும் வயதிலுள்ள சிறுவர்களை பாடசாலைகளில் சேர்ப்பதற்கும், பாடசாலைகளை விட்டு விலகிய சிறுவர்களை தொடர்ந்தும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்வதற்கும், நடவடிக்கை எடுத்து வருவதாக, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.
சிறுவர்கள் தொழிலில் அமர்த்தப்படுவது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிடுகின்றார்.
சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக பெண்கள் மற்றும் சிறுவர்கள் முறைப்பாட்டு பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
தண்டனைச் சட்டக் கோவையின் பிரகாரம் 18 வயதிற்கு குறைந்தவர்கள் சிறுவராக கருதப்படுவதுடன், சிறுவர் மற்றும் இளையோர் தொடர்பான கட்டளை சட்டத்தின் பிரகாரம் 16 வயதிற்கு குறைந்தவர்கள் சிறுவர்களாக கருதப்படுகின்றனர்.
எவ்வாறாயினும் இந்த சட்டத்தின் பிரகாரம் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.