மஹிந்தவின் வருகை நாட்டுக்கு நல்லதல்ல : அஜித் மானப்பெரும
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வருகை நாட்டிற்கு நல்லதல்ல. அவருக்கு ஒரு போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேட்புமனு வழங...


மேலும் மஹிந்த ராஜபக் ஷவின் ஆசிர்வாதத்தை கொண்டு அரசியல் செய்வதற்கு இடமளிக்க மாட்டோம். நிதி மோசடி விசாரணை பிரிவின் பெயரை கேட்டாலே கொள்ளையர்கள் விடுதலைப் புலிகளின் கபிர் ஆயுத விமானத்திற்கு பயந்து நடுங்குவதனை போன்று நடுங்குகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் அங்கு குறிப்பிடுகையில்,
முன்னைய ஆட்சியின் போது மக்களுடைய பணத்தைக் கொண்டு அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பதிலாக பாரியளவில் கொள்ளையிட்டனர். இதற்க மைய அரச நிறுவனங்களுக்கு சொந்தமான பணத்தை ராஜபக் ஷவின் குடும்பத்தின் வரப்பிரசாதங்களுக்கு மாத்திரம் பிரயோகித்துள்ளனர்.
இதன்படி ஸ்ரீலங்கா டெலிகொம், லொத்தர் சபை போன்ற அரச நிறுவனங்களின் இலாபங்கள் அனைத்தையும் நாமல் ராஜபக் ஷவின் எதிர்க்கால அரசியலுக்கு செலவிட்டுள்ளனர். முன்னைய ஆட்சியின் போது மக்கள் பணத்தைக் கொள்ளையிட்டோர் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை முன்னெடுத்து வருகிறோம். விசாரணையின் முடிவில் நிச்சயமாக குற்றவாளிகள் தண்டனையை அனுபவிப்பார்கள்.
மக்களின் பணத்தைக் கொள்ளையிட்டோர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நிதி மோசடி விசாரணை பிரிவினை நிறுவினோம். இந்நிலையில் தற்போது நிதி மோசடி விசாரணை பிரிவின் பெயரை கேட்டாலே கொள்ளையர்கள் விடுதலைப் புலிகளின் கபிர் ஆயுத விமானத்திற்கு பயந்து நடுங்குவதனை விடவும் அஞ்சுகின்றனர். இந்நிைலையில் இலங்கை லொத்தர் சபையின் 38 கோடி ரூபாவிற்கு என்ன நடந்தது என்பது கூட தெரியாமல் உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியின் போது முன்னெடுக்கப்பட்ட மோசடிகள் பெரும்பாலானவை தொடர்ந்தும் வெளிவந்து கொண்டே இருக்கும்.
ஆகவே குறித்த மோசடிகள் தொடர்பில் நிதி மோசடி பிரிவிடம் பொறுப்பை ஒப்படைத்து சுயாதீன விசாரணையை ஆரம்பித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்போம்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வருகை தரபோவதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. முன்னாள் ஜனாதிபதி மீளவும் அரசியலுக்கு பிரவேசிப்பது நாட்டிற்கு நல்லதல்ல. எவ்வாறாயினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு வேட்புமனு வழங்க மாட்டார் என்றார்.