பிரித்தானிய மருத்துவமனையில் ”பேய்” நடமாட்டமா?: ஆதாரத்துடன் புகைப்படம் வெளியிட்ட ஊழியர்
பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பேய் நடமாடுவதாக புகார் கூறிய மருத்துவமனை ஊழியர் ஒருவர் அதற்கான ஆதரத்தையும் வெளியிட்டு அதிர்ச்சியை...


பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பேய் நடமாடுவதாக புகார் கூறிய மருத்துவமனை ஊழியர் ஒருவர் அதற்கான ஆதரத்தையும் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள West Yorkshire நகரில் Leeds General Infirmary என்ற மருத்துமனை செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வரும் Andrew Milburn என்பவர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு பணிக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இரவு நேரத்தில் தனது காதலியுடன் எஸ்.எம்.எஸ் மூலம் உரையாடிக் கொண்டிருந்தபோது, தான் மருத்துவமனையில் பணியில் இருக்கிறேன் என்று ஆண்ட்ரூ கூறியதை அவரது காதலி நம்பவில்லை.
தனது காதலிக்கு நிரூபிக்கும் வகையில், குழந்தைகள் பகுதியான Clarendon Wing-ன் நடைப்பாதையை தனது கைப்பேசியில் படம் பிடித்துள்ளார்.
பின்னர், அந்த புகைப்படத்தை தனது காதலிக்கு அனுப்ப முயற்சித்தபோது சட்டென அவரது பார்வைக்கு புகைப்படத்தில் இருந்த அந்த வெள்ளை நிற புகைப்போன்ற உருவம் தெரிந்ததும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அந்த புகைப்படத்தை ஜூம் செய்து நன்கு கூர்ந்து பார்த்தபோது அங்குள்ள அறை ஒன்றிற்குள் வெள்ளை நிற ஆடையுடன் குழந்தை ஒன்று நடந்து போவதை பார்த்து அது பேய் தான் என்ற முடிவிற்கு வந்துள்ளார்.
மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்திய அந்த புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தபோது ஆயிரக்கணக்கான நபர்கள் அதனை பகிர்ந்தனர்.
அசாதரண நிகழ்வுகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் வல்லுநர்களும் அந்த புகைப்படத்தில் உள்ளது உண்மையிலேயே பேய் தானா என்று ஆராய்ந்து வருகின்றனர்.
பேஸ்புக்கில் நபர்கள் சிலர் Ghost Capture என்ற அப்ளிகேஷன் மூலம் அந்த நபர் பேய் இருப்பது போல புகைப்படத்தை மாற்றி தயார் செய்துள்ளார் என்றும், அது நிச்சயமாக பேயாக இருக்க முடியாது என மறுத்து வருகின்றனர்.
இதற்கு பதிலளித்த ஆண்ட்ரூ, மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் பிரிவில் இரவு நேரத்தில் இருக்கும் போது, யாரோ நடந்து செல்வது போல் சத்தம் கேட்கும்.
ஆனால் திரும்பி பார்த்தால் அந்த இடத்தில் யாரும் இருக்க மாட்டார்கள் என்றும், மருத்துவமனையில் அசாதாரண சம்பவங்கள் நடப்பது உண்மை தான் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
இரவு நேரத்தில் பேய் நடமாடுவது போன்ற அந்த புகைப்படத்தால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.