அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா
ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் சீறிப்பாயும் ‘ஹைபர்சானிக் கிளைட்’( Hypersonic glide) வாகனத்தை சீனா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. தென்சீனக்...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_353.html

தென்சீனக் கடற்பகுதியில் உள்ள ஜப்பான், வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சொந்தமான தீவுகளையும், கடல்பரப்பையும் சீன ராணுவம் ஆக்கிரமித்து வருகிறது.
இந்த பிரச்சனையில் பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்க களமிறங்கியுள்ளது.
சமீபத்தில் தென்சீனக்கடலில் அமெரிக்க உளவு விமானம் வட்டமடித்ததற்கு, "இது எங்கள் பகுதி நீங்கள் திரும்பி போகலாம்" என அமெரிக்காவை, சீனா எச்சரித்தது.
இந்நிலையில், மீண்டும் அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக, அதிநவீன ‘ஹைபர்சானிக் கிளைட்’ வாகனத்தை சீனா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
தரைத்தளம், போர்க்கப்பல் அல்லது போர் விமானத்தில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் இந்த ‘ஹைபர்சானிக் கிளைட்’ வாகனம் விண்வெளியில் செலுத்தப்படுகிறது.
அங்கு ஏவுகணையில் இருந்து பிரியும் அந்த வாகனம் ஒலியைவிட 10 மடங்கு வேகத்தில் சீறிப் பாய்ந்து இலக்கை தாக்கி அழிக்கிறது. அதாவது மணிக்கு 12,231 கி.மீற்றர் வேகத்தில் பயணிக்கும் இதன்மூலம் அணுகுண்டுகளையும் வீச முடியும்.
ஹைபர்சானிக் கிளைட் வாகத்தை ரோடாரில் கண்டறிய முடியாது என்பதால், இதனை தடுக்கவோ, அழிக்கவோ முடியாது என பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவை அடுத்து சீனாவிடம் மட்டுமே ஹைபர்சானிக் கிளைட் வாகனம் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate