நடுவானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
நோர்வே நாட்டிலிருந்து பறந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விடுக்கப்பட்ட மிரட்டலை தொடர்ந்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது பெரும் பரபர...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_345.html

நோர்வே நாட்டிலிருந்து பறந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விடுக்கப்பட்ட மிரட்டலை தொடர்ந்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நோர்வே நாட்டிற்கு சொந்தமான Ryanair FR7023, என்ற போயிங் விமானம் 160 பயணிகளுடன் நோர்வேயின் தலைநகரான ஓஸ்லோ விமான நிலையத்திலிருந்து இன்று கிளம்பியுள்ளது.
போலந்து நாட்டில் உள்ள Warsaw Modlin சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த அந்த விமான நிலைய அதிகாரிகளுக்கு ஒரு மர்ம அழைப்பு வந்துள்ளது.
அதில், விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும் அது எந்த நேரத்திலும் வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதேநேரத்தில், விமானமும் சென்றடைய வேண்டிய விமான நிலையத்திற்கு அருகே சென்று கொண்டிருந்ததால் அதனை உடனடியாக தரையிறக்குமாறு விமானிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டதும், அதில் இருந்த பயணிகள் மற்றும் விமான குழுவினரை வெளியேற்றிய வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் விமானத்தை சல்லடையிட்டு தேடினார்கள்.
ஆனால், விமானத்தில் சந்தேகிக்கும் வகையில் எந்த பொருளும் இல்லாததால், விமான நிலையத்திற்கு வந்த அழைப்பு பொய்யானது என பொலிசார் கண்டு பிடித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய போலந்து நாட்டு பொலிஸ் அதிகாரியான Mariusz Mrozek , விமானத்தில் வெடிபொருள் இருப்பதாக பொறுப்பற்ற முறையில் பொய் தகவல் அளித்த சம்பவம் கண்டிக்கத்தக்கது.
தொலைப்பேசி அழைப்பு வந்த எண்களை ஆதாரமாக வைத்து அந்த அழைப்பு வந்த வீட்டிலிருந்து சுமார் 48 வயதுடைய நபரை பொலிசார் கைது செய்ததுடன், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate